யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி வீஸ்பாடனை(Wiesbaden) வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தர் பூபதிபாலவடிவேற்கரன் (பூபதி/பாலா) இன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சூரியகுமாரியின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சபா ஆனந்தர், அன்னம்மா தம்பதிகளின் மூன்றாவது மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், கமலாதேவி தம்பதியினரின் அன்புக்குரிய மருமகனும்,
காயத்திரியின் பாசமிகு தந்தையும்,
பெனி கென்சி அருள்ஞானத்தின் அன்பு மாமனாரும்,
கேந்திராவின் அண்ணாவும், ஏகன் அனேகன், யுவன் விஷ்வா ஆகியோரின் செல்ல அப்புவும்,
சபாபதிபாலகெங்காதரன், இரகுபதிபாலஸ்ரீதரன், அருந்ததி ஆனந்தகௌரி, காலஞ்சென்ற காயத்திரி ஆனந்தரமணி, மற்றும் அமரசேனாபதிபாலகார்த்திகைக்குமரன், ஸ்ரீபதிபாலமுரளிதரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரது பிரிவினை அவரது குடும்பத்துடன் மைத்துனர்கள், மைத்துனிகள், பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரும் துயர் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +491622493894