யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தராசா உதயராணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தனைச் சிற்பியாய் சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே நல்வளமான வாழ்வு தந்தாயே!!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
எம்மை இவ் உலகத்திற்கு ஈன்றவளே!
எமக்கு உயிர் உதிரம் தந்தவளே அம்மா
உன் உயிரணுவில் சுவாசிக்கின்றோம் தாயே
எம் உயிர் சுடரால் என்றும் ஒளி கொடுப்போம் - தாயே
கனிவுறும் உந்தன் எண்ணம்
உன்போல் துணையிருப்பார் உலகில் எமக்கில்லை
கணப்பொழுதில் நடந்ததென்ன
உன் இறுதி மூச்சுக்காற்றோடு
கலந்ததென்ன நம்பமுடியவில்லை
நடந்தது என்னவென்று
அம்மா...அம்மா... யாரை கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஓர் முத்தம் தாராயோ?
ஆண்டுகள் உருண்டாலும் அலை கடல் அலை
அலைகளாக என்றும் உங்கள் அன்பு
அலை நினைவுகளுடன்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!