திதி: பிரதனம்
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தராசா உதயராணி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தனைச் சிற்பியாய் சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே நல்வளமான வாழ்வு தந்தாயே!!
எம்மை விட்டு எங்கு சென்றீர்?
உந்தனை நினைக்கையிலே உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம் என் செய்வோம்
எம்தனை தவிக்கவிட்டு எங்குதான் சென்றீரோ?
தேடுகிறோம் அம்மா தேம்பி அழுகிறோம்
கண்ணியமாய் வாழ்ந்த காருண்ணிய சீலியே
காசினியில் நின் புகழ் நிலைத்தே இருக்குமம்மா
பாசத்தால் அரவணைத்து அறிவு ஊட்டி
விழுதெறிந்து பெருவிருட்சமாய் வியாபித்து
நிற்கும் வேளையிலே விண்ணுலகை அடைந்தீர்கள்
அதை எண்ணி பேதையராய் துடிக்கின்றோம்
துடுப்பற்ற படகு ஆனோம் துயர்துடைக்க வந்திடுங்கள்
கல்லுருகும் உங்கள் கனிவான முகம் கண்டால்
நெஞ்சத்து சோர்வெல்லாம் தானே உருகிவிடும்
எங்கள் அம்மாவே ஆண்டுகள் பல கடந்தாலும்
ஆறவில்லை எங்கள் உள்ளம்
தவிக்கின்ற எம்மை விட்டு தனிப்பிறவி எடுத்து
எங்குதான் சென்றீர்கள்!!!