
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தன் இரட்னேஸ்வரி அவர்களின் 31 நாள் நினைவஞ்சலி.
இவர் இணுவில் மஞ்சத்தடி தொண்டர் சுப்பையாவின் மகள் ஆவார்.
அம்மா
உன் மடி மீது எனை சுமந்தவளே!
உதிரத்தை பாலாக தந்தவளே!
சோறூட்டி, தாலாட்டி, பாராட்டி
எனை வளர்த்த என் தாயே
இறுதியில் உன் முகம் காணா
தவித்தேனே, கலங்கினேனே, கதறினேனே
துடிதுடித்தேனே அம்மா
இனி எப்போது உனை பார்ப்பேன்
இனி எவ்வாறு உன் குரல் கேட்பேன்
அம்மா
உன் முகம் பார்கின்
என் சொந்தங்கள் தெரியும்
உன் குரல் கேட்பின்
உலகத்தின் ஆறுதல் கிடைக்கும்
உன் அன்பின் முன்னே
உலகத்தின் சகலதுமே
என் காலடி கிடக்கும்
அம்மா
நான் வாழ்கின்ற வாழ்க்கை
நீ கொடுத்த வரமே!!
நீ என் தாயாக பிறந்ததுவும்
நான் கொண்ட தவமே!!
தந்தையின் தீடீர் மரணம்
உன் சிறுவயதில் நீ சுமந்த
பெரும் துயரம் அம்மா
கொலுவிழந்து, சுகமிழந்து
நிலை குலைந்த போதும்
எங்கள் பிஞ்சு கரம் பற்றி
நமக்காக உயிர் வாழ்ந்தவள் நீ
எமக்காக
சுமைகளை கூட சுகமாக
சுமந்தவள் நீர்
என் தாயும் நீயே
என் தந்தையும் நீயே
என் சின்ன கால்கள் ஓடும்போது
நீயும் பின்னால் ஓடி ஓடி வருவாயே
நான் விழுந்து விடுவேனோ என்று
இன்று என் கால்களும் தோள்கரம்
திடமாக புயமாக வளர்த்தவளே
நீ விழும் போது நான் உனை தாங்க உன் முன்னால்
ஓடிவரவில்லையே அம்மா
எனை தோளோடும் மார்போடும்
சுமந்தவளேஎன் தோள்மீது உனை சுமக்க
முடியவில்லையே அம்மா
ஒரு கூட்டு குருவியாய்
எமை காத்தவரே
உனை விட்டு திக்கெட்டும்
சிறகடித்து பறந்தோமே
பறவைகள் கூடுமாமே
வேடந்தாங்கு சரணாலயம்
நாமோ இங்கே
ஆலயம் சரணடையா
வேடம்- தாங்கி நிற்கிறோம் அம்மா
உன் இதயம் நின்றுவிட்டாலும்
எங்களின் இதயங்களில் நீதுடித்து கொண்டிருகிறாய்
நீ தொப்புள் கொடி மூலம்
உன் மூச்சை பகிர்ந்ததினால்
நாம் விடும் மூச்சும் உன்னுடையதே
நீ வாழும் போது உனை நான் புரிந்ததில்லை
நான் உனை புரியும் போது
நீ என் அருகில் இல்லை
உலகத்தில் தீயாய் நின்றவரே
எங்களை குளுமையாய் வளர்தவரே
தந்தைக்கு நிகராய் இருந்தவரே
புத்தி புகட்டும் ஆசானானவரே
துவளும் போது தோள் கொடுத்த
தோழியானவரே
சேர்ந்து விளையாடி குழந்தை மனம் கொண்டவரே
நீ எனக்கு எல்லாமா சகலதுமாக வாழ்ந்தவரே
இன்றோஎன் தெய்வமாகி போனவரோ என் அம்மா?
மனிதர்கள் தான் மரணிக்கிறார்கள்
நினைவுகள் என்றும் மரணிப்பதில்லை அம்மா
நீங்கள் மரணித்தபின்னும் வாழ்கிறீர்கள்
நினைவுகளாய்எங்கள் இதயத்தில் பூசைக்குரியவராய்
வணக்கத்குரியவராய்
நான் மறுபடி பிறக்கின்
உன் மகனாக வேண்டும்
உன் மடிமீது நான்துயில் கொள்ள வேண்டும்
என் துயரங்கள் நீ தீர்க்க வேண்டும்
என் சந்தோஷம் அத்தனையும்
நான் பகிர வேண்டும்
உன் பாதம் நான் பணியவேண்டும்
உன் ஆசி என்றென்றும்
நமக்கு வேண்டும்
சாந்தி சாந்தி சாந்தி
சமர்ப்பணம்
உன் பிரிவால் துயருறும் உன் பிள்ளைகள்
கோணேஸ்வரன்(லண்டன்), முரளீஸ்வரன்(பிரான்ஸ்),
கவிதா, சுகிதா(கனடா), சகீதரன்(இலங்கை)
ஆக்கம்: சுவர்ணாங்கி- மருமகள்
இரங்கல்: அஸ்வத்தாமன், ஆரபி, ஆகாஷ்(பேரப்பிள்ளைகள்)