
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தன் இரட்னேஸ்வரி அவர்கள் 29-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கனகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை ஆனந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோணேஸ்வரன்(லண்டன்), முரளீஸ்வரன்(பிரான்ஸ்), கவிதா, சூட்டி(கனடா), சகீதரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரளா(லண்டன்), சுவர்ணாங்கி(பிரான்ஸ்), அசோகன்(கனடா), சதாசுதன்(கனடா), விதுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், இளையதம்பி, சிவராசா மற்றும் நடேசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மிதுஷா, விதுஷா, அஸ்வதாமன், ஆரபி, ஆகாஷ், தனீஸ், டினேஸ், ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைகால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.