யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தஈஸ்வரி தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடம் ஒன்றாகிற்று இம்
மண்ணைவிட்டு நீங்கள் சென்று
நீங்கள் வென்ற மனங்களை விட்டு
சென்றிடத்தான் முடியுமோ
தூண்டில் மீனாய் துடிக்கின்றோமம்மா
மற்றவர் துயர்கண்டு துடிப்பவரே!
உங்களுடைய பிள்ளைச்
செல்வங்கள் கதறுகின்றனர்..
அணைக்க மறந்ததேன் அம்மா
என்ன தவறு செய்தனர்
இம்மண்ணில் மரணிக்க வில்லை அம்மா நீங்கள்
நீங்கள் இப்போ மெளனமாய்
உறங்குகிறீர்கள் கண்மூடி...
பிரிவொன்று உமக்கில்லை
மண்ணில் பரிவோடு எம்பக்கம்
இருக்கின்றீர்கள் இப்படிதான் எண்ணிக்
கொள்வோம் போகும் வழியில்
நாம் இணையும் வரை!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள்,
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 03-01-2024 வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் உள்ள அவரது இல்லத்திலும்,கரம்பொன் சீரடி ஆஞ்சிநேயர் இல்லத்திலும் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.