யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தநடராஜா மித்ரதேவா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-08-2026
இரண்டு ஆண்டுகள் கடந்தாலும்,
உங்கள் நினைவுகள் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.
உங்கள் அன்பும் அரவணைப்பும் இன்று வரை
என் வாழ்வின் துணையாகவே இருக்கின்றன.
நீங்கள் இல்லாத ஒவ்வொரு நாளும்,
உங்கள் நினைவோடு தான் என் பயணம் தொடர்கிறது.
என்றும் உங்கள் சிரிப்பையும்,
பாசமிகு வார்த்தைகளையும் மனம் ஏங்கித் தேடுகிறது.
என்றென்றும் என் இதயத்தில் அழியாத
நினைவாக வாழும் என் அன்புக் கணவரே.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு
அகலாது நாங்கள் உங்களை மறந்தால்
தானே நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான் அப்பா...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித்
தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா...
உங்கள் பிரிவால்
துயருறும் குடும்பத்தினர்...
Dr. Mithradeva, a gentle person, kind and charming. Condolences to my old friend Thanathevy, who I know in thefrom the 980's when she was a violin tutor at the Singapore Indian Fine Arts Society....