Clicky

பிறப்பு 12 APR 1935
இறப்பு 10 DEC 2018
அமரர் அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்)
திருகேதிஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர்
வயது 83
அமரர் அம்பலவாணர் திருநாவுக்கரசு 1935 - 2018 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 12 DEC 2018 Sri Lanka

திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையின் இணைச்செயலாளரான அமரர் புலவர் அ.திருநாவுக்கரசு ( புலவர் ஐயா) அவர்களது புகழுடல் 12.12.2018 புதன் காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்றைய தினம் பி.ப.2.00 மணியளவில் இறுதிக் கிரிகைகள் ஆரம்பமாகி, பி.ப.4.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. கடந்த ஐந்து தசாப்தங்களாக மிகுந்த அர்ப்பணிப்புடன் கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சரப்பெருமானது திருப்பணி களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, ஏனையோருக்கு முன்மாதிரியாக தன் வாழ்நாளில் பெரும்பகுதியை திருக்கேதீச்சரத் தலத்திலேயே வாழ்ந்து, #அமரர்_சித்தாந்த_வித்தகர்_நமசிவாயம்_ஐயாவின்_வழிகாட்டுதலில் ஆலயத்திலே ஆகமவிதிமுறைகளுக்கமைய அனைத்துக் கருமங்களும் இடம்பெறுவதனை உறுதிப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர். ஆலய கும்பாபிஷேகங்கள், மகோற்சவங்கள், சிவன்ராத்திரிப் பெருவிழாக்களின் போதெல்லாம் தனது முதுமையையும் பொருட்படுத்தாது, ஒரு இளைஞனுக்குரிய துடிப்புடன் ஓடி ஓடி ஏற்பாடுகளை மேற்கொண்ட செயல்வீரன். இத்தகைய வைபவங்களின் போது இதனோடு தொடர்புபட்ட துறைசார் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அவர்களது அதிஉச்ச சேவைகளைப் பெற்றுப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியசாலி. ஆலயத்துக்குரிய சொத்துக்களை குறிப்பாக காணிகளை அடையாளங்கண்டு,அவற்றின் எல்லைகளைப் பாதுகாத்துப் பேணுவதிலும், அக்காணிகளில் ஆலயப் பயன்பாட்டுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மா, வாழை, தென்னை போன்ற பயனுறு மரங்களை நட்டு சுயதேவையை ஓரளவு பூர்த்தி செய்யக் கூடிய நிலையை ஏற்படுத்திய பெருமகன். அன்னாரது இழப்பு " பேரிழப்பு" என்ற வெறும் வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடிய ஒன்றல்ல. அது #மாபெரும்_இழப்பு# என்பதே உண்மை. அவரது வெற்றிடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது. #அவரது_ஆத்மா_சாந்தியடையப்_ _பிரார்த்திக்கின்றேன். குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரோடு உறவாடிய நாற்பது வருடங்கள் என்னால் மறக்க முடியாதவை. #ஓம்_சாந்தி.

Tributes