
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், திருக்கேதீஸ்வரம் ஆகிய இடங்களை நிரந்திர வசிப்பிடமாகவும் கொணட அம்பலவாணர் திருநாவுக்கரசு அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
அறிவழகன், இளவழகன், மதியழகன், திருமறைச்செல்வி, காலஞ்சென்ற அன்பழகன், கண்ணழகன், அருள்மறைச்செல்வி,ஞானப்பூங்கோதை, மதிவேலழகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயமாலினி, கலையரசி, ஜெகநாதன், சந்திரபாலன், ராஜலட்சுமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, சங்கரலிங்கம், சிரோன்மணி, வாலாம்பிகை, கனகசபை மற்றும் திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஆதீசன், அக்ஷயன், அக்ஷயா, அபிசயன், கீதா, நிதியா, திவ்யா, நன்சிகா, டனுக்சன், தேனுஜன், நிஷான், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept my condolences and sympathies!!! May his soul rest and peace!!!