யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளம் 2ம் பண்ணையை வசிப்பிடமாகவும், தற்போது வவுனியா No. 100 சேக்கிழார் சுற்றுவட்டவீதியை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் தம்பிராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-07-2026
எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உம்மை அப்பா!
கண்ணைக் காக்கும் இமை போல
எம்மைக் காத்த எம் அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.