திதி:11/11/2026
மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ். அளவெட்டி, ஐக்கிய அமெரிக்கா Texas ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்புசாட்சி பொன்னம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா.....
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீங்கள்!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீங்கள்!
நீங்கள் விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீங்கள் தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீங்கள் இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீங்கள் எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்..!
May the love and mercy of our Lord be bestowed upon you and your family during this unfortunate time. My most sincere condolences at your sad loss. Regards Padmini Srinivasan