Clicky

பிறப்பு 26 FEB 1945
இறப்பு 28 SEP 2023
அமரர் அம்பிகை விஜயநாதன்
இளைப்பாறிய யாழ்/ வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியை, Toronto District Catholic School Board Early Childhood Educator, Toronto District School Board Tamil Teacher
வயது 78
அமரர் அம்பிகை விஜயநாதன் 1945 - 2023 கொட்டடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambikai Wijayanathan
1945 - 2023

இனிய சகோதரியே ,நீ எங்கே சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாய் ? உனது மறைவைக்கேட்டு திடுக்கிடடுப்போய்விட்டோமே! - உனது அன்புக்கணவருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன் சிட்னிக்கும் வரும்போதெல்லாம் மறக்காமல் எங்களிடம் வருவீர்களே! உனது அன்பான பேச்சாலும் ,அழகிய சிரிப்பாலும் எல்லோர் மனங்களையும் கொள்ளைகொண்ட புன்னகை அரசியே ,நீ எங்கே போய்விட்டாய் ! தமிழாலே மின்னஞ்சல் எழுதுங்கள் அக்கா என்று கேட்பாயே ,உங்களோடு தொடர்பு கொள்ள தமிழ் தட்டெழுத்துப்பயின்று விடடேன் என்று. சொல்லிப்பெருமைப்பட்ட இந்த சகோதரியை எப்படி மறப்பேன் அம்பிகையின் ஆன்மா இறைவனின் திருவடிகளில் அமைதி அடைய பிரார்த்திக்கும் அன்பான அக்கா அருமை மனைவியை ,அன்பு அன்னையை ,அருமை அம்மம்மாவை அப்பம்மாவை மற்றும் பாசமான சகோதரியை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு ,அம்பிகை வணங்கிய அம்மாளாச்சிதான் ஆறுதலும் மனத்தைரியமும் அளிக்கவேண்டும் என் பிரார்த்திக்கும் பாசமான பராசக்தி அக்காவும்,மகள். குடும்பத்தினரும்

Write Tribute