யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலவி சின்னையா நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-03-2023
அம்மாவும் நீங்களும் உங்கள் வாழ்கையை
சந்தோஷமாக வாழ்ந்தீர்கள்
78 ஆண்டு காலம் உங்களின் திருமண பந்தம்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பு, இரக்கம் எல்லாம் பார்த்து வியந்து நின்றோம்
அம்மா மீது கொண்ட பேரன்பு காரணமாக
அவர் இறந்து 4 மாதங்களில் நீங்களும் எங்களை விட்டு
பிரிந்து
அம்மாவிடமே சென்று விட்டீர்கள் ...
என்றும் அம்மாவை பிரியாமல் அவருடன்
சந்தோஷமாக இருக்க பிராத்திக்கின்றோம்...
தினம் ஒரு சந்தோசம் தந்தீர்கள்
இன்று தினம் தினமாய் உங்களுக்காய்
அழுகின்றோம் அப்பா...
நீங்கள் பெற்ற பிள்ளைகள்
சந்தோசமாய் இருக்க அயராது உழைத்தீர்கள்
ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்...
வாழ்க்கைப் பெருங்கடலில்
வளமான வாழ்வை எமக்கு
அமைத்து தந்து
அம்மாவும், நீங்களும் எங்களை
தவிக்க விட்டு வானகம் சென்றீரோ!!!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள்
இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!
Black Columpan mampalam?