யாழ். வடமராட்சி கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் யோகேந்திரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அப்பா
என் செய்வோம் நாங்கள்
பக்குவமாய் பாசமாய் வளர்த்துவிட்டு
பாரை விட்டு சென்றீர்கள் அப்பா
விண்ணிலே தெய்வமாய் நின்று
எம்மை வழிநடத்துங்கள் அப்பா!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று கொழும்பு
முகத்துவாரக் கடற்கரையில் நடைபெற்று பின்னர் 20-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வீட்டுக்கிரியைகளும்,
ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன விருந்து உபசாரமும் வெள்ளவத்தையில் உள்ள அவரது இல்லத்தில்
நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
வீட்டு முகவரி
37th Lane No.14,
5/4, வெள்ளவத்தை,
கொழும்பு- 06
Our deepest condolences... May your soul rest in peace!