5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை தெற்கு சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருஞானசம்பந்தர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 5 போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி
கூறி அரவணைத்து
பேணிக் காத்த எம் தெய்வமே!
நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள் விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்