மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை தெற்கு சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருஞானசம்பந்தர் அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரியரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிச்சந்திரன்(யாழ். மாநகரசபை), சுபாஸ் சந்திரன்(போன் சொப் உரிமையாளர்- சுன்னாகம்), சுலோசனா, சுலீஸ், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டர்சினி, மகாதேவி(ஆசிரியை), சுந்தரராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லமணி, தெய்வமணி, வீரகத்திப்பிள்ளை மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிம்சன், சுபானுஜா, பபிலன், கிஷான், தக்ஷிகா, தக்ஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.