Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 28 DEC 1937
இறப்பு 27 DEC 2025
திரு அம்பலவாணர் செல்லத்துரை (வாணர், குலம் அண்ணர்)
Rtd. Postal Examiner, Department of Posts - Sri Lanka, Founder & Former Gen. Secretary- Sri Murugan Community Centre, and Former Secretary- Sitpanai Murugan Temple Governing and Restoration Councils
வயது 87
திரு அம்பலவாணர் செல்லத்துரை 1937 - 2025 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா Ottawa, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்லத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும். 


"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

எங்கள் அப்பாவின் இறுதிக் காலத்தில் பலவழிகளிலும் உதவி நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள். அப்பா இறை கழல் நாடிய கணம் முதல் சமயமறிந்து பேருதவி புரிந்தோர்க்கும், ஓடி வந்து எம் துயர் பகிர்ந்தோர்க்கும், ஆறுதல் வார்த்தைகள் கூறியோர்க்கும், மலர் வளையங்கள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் சமூக ஊடங்கள் , RIPBOOK ஊடாக தமது இரங்கல்களைச் செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எமது தந்தையின் நினைவாக போசனங்களை வழங்கியும், நினைவு நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைத்தவரிகளுக்கும் மற்றும் நடத்தியவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

 அப்பாவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்றவர்களுக்கும், அஞ்சலி உரை ஆற்றியவர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அந்தியேட்டி, சபிண்டீகரண நிகழ்வுகள் நிறைவாக நிகழ்வதற்காய் பல்வேறு வழிகளில் உடன்நின்று உழைத்தவர்களுக்கும், மனம் முன் வந்து அப்பாவைப் பற்றிய எண்ணங்களயும் ஞாபங்களையும் எழுந்தில் பகிர்ந்தவர்களுக்கும், பிரசுரங்களை அச்சேற்றியவர்களுக்கும் எமதனைவரினதும் நன்றிகள் உரித்தாட்டும். 

*******************************************************************

  அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 24-01-2026 சனிக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் 85 Dynamic Drive, Unit 2, scarborough எனும் முகவரியில் நடைபெறும், அதனைத்தொடர்ந்து அவரது அஸ்தி 986 Frisco Rd, Pickering எனும் இடத்தில் உள்ள கடற்கரையில் கரைக்கப்பட்ட் பின்னர், 26-01-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் 33 Reginald Lamb Crescent, Markham) எனும் முகவரியில் சபிண்டீகரண நிகழ்வு நடைபெறும்.

இந்த நிகழ்வுகளின் நிறைவாக, 31.01.2026 சனிக்கிழமை அன்று அருள்மிகு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் (733 Birchmount Rd, Scarborough) நடைபெறவுள்ள அவரது நினைவிதழ் வெளியீட்டுடன் கூடிய மதியபோசன நிகழ்வில் நீங்கள் நேரில் கலந்து அவரது ஆன்ம ஈடேற்றத்தில் பங்கெடுத்து அந்நிகழ்வை சிறப்பிக்குமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம்


************************************************************


 எங்கள் அன்புத் தந்தையே!
நாட்கள் 31 ஆனதுவே...
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?

 நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமனே

 எங்கள் அன்புத் தெய்வமே!
 பூந்தோட்டத்தில் நல் மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா

 காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
 கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

இங்ஙனம், வாணர் குடும்பத்தினர்
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.