23ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமரசிங்கம் கமலநாதன்
(ரஞ்சன்)
அரச கட்டிட ஒப்பந்தகாரர்
வயது 33
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு களுதாவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் கமலநாதன் அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் 23 ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!
23 ஆண்டு என்ன 23 ஆயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
தகவல்:
குடும்பத்தினர்