யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அலோஜி ஜெகநாதன் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் மேரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தயாளபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இன்பமணி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோசிகா(கனடா), அஜந்தன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமலன், ஈவோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விமலாபத்மினி(புலோலி பருத்தித்துறை), காலஞ்சென்றவர்களான பத்மநாதன், லோகநாதன், கௌசாம்பிகை, ராஜினி, இராஜநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெபநேசன், இன்பநாளினி(கனடா), ஜெபராஜன்(லண்டன்), ஜெபரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செனிக்கா, ஏஞ்சலிக்கா, பியங்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.