Clicky

Late Alfred Mathuranayagam Brodie
Rest - 07 MAR 2021
Late Alfred Mathuranayagam Brodie 2021 Jaffna, Sri Lanka Sri Lanka

Tribute

self 13 MAR 2021 Canada

அஞ்சலி  எங்கள் ஆசிரியர் உயர்திரு ஏ.எம் .புரூடி அவர்கள்  கர்த்தருக்குள் நித்திரை:7 மார்ச் 2021. யாழ்ப்பாணக்கல்லூரியின் சிறந்த ஆசிரியராகவும் ,நல்லதோர் மகனாகவும் ,கணவனாகவும் ,தந்தையாகவும் விளங்கிய அன்னார் அவர்கள் .இந்த பூமியில் பிரயாணம் மேற்கொண்டார் .தான் எடுத்துக்கொண்ட பணிகளை சிறப்பாக முடித்தார்.எல்லோரும் போற்ற பாரில் சீரோடும் ,சிறப்போடும்  வாழ்ந்தார் .வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் இறையிடம் ஆனந்த  நித்திரை கொள்ள  சென்றுவிட்டார்.அவர் வாழ்க்கையையும் ,சேவையையும்  கொண்டாடுவோம் .அதனால் கடல் தேடும் ஆறுகள் கலங்குவதில்லை விண் தொடும் நட்சத்திரங்கள் அழுவதும் இல்லை.பின்னர் அறிவு நிறைந்த மனிதா ஏன் மயக்கம் ஏன்? இதுவே விதி .ஆறுதல் கொள் ..மண்ணில் பிறந்தோம் .மண்ணுக்குள் சேர்ந்தோம் .ஊனும் ,எலும்பும் கொண்ட சரீரம் என்றோ ஒரு நாள் அழிந்து விடும் .ஆனால் நீங்கள் உருவாக்கிய எச்சங்களான பிள்ளைகள் வடிவில் ,நீங்கள் சேர்த்த புகழினாலும் ,மேன்மையினாலும் இந்த பூமியில் நீடூழி வாழ்வீர்கள்!! உங்கள் ஆன்மா கர்த்தருக்குள் சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்.  "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"Lovingly remembered by your student , Toronto,Ontario,Canada.'The day thou gavest Lord is ended"