யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக 27-08-2022 சனிக்கிழமை அன்று கொழும்பு 15 மட்டக்குளி புனித மரியாள் ஆலயத்தில் பி.ப 06:00 மணிக்கும், மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தில் காலை 06:30 மணிக்கும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படும்.
Dear Pushpam akka, please accept our heartfelt sympathies at the loss of Linus athan. May our loving God be with you and all family members. Let us thank God for his life. Our prayers are with you...