யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை லீனஸ் கிளெமன்ற் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தெய்வமே! நீங்கள் எமைப் பிரிந்து
ஓடியது ஓராண்டு - இருப்பினும்
காயவில்லை எம் ஈரவிழிகள்
புன்னகையுடன் எமை
வழிநடத்தி வாழவைத்த
எம் பாசத்தின் பிறப்பிடமே!
பார்க்குமிடமெல்லாம்
எம் பார்வையுள் தெரிகின்றீர்களே!
இன்று நீங்கள் இல்லாது
புன்னகையைச் சிறைவைத்து
தனிமையில் பேசுகின்றோம்
எங்கள் அப்பாவை எங்கே எப்போ
காண்போம் என்று தவிக்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்...
அன்னாரின் விண்ணகப் பிறப்பின் 1வது வருட நினைவாக இவரது மண்ணக வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறியும், விண்ணகப் பிறப்பிற்காக இறைவனிடம் வேண்டியும் 27-07-2023 வியாழக்கிழமை காலை 11:00 மணிக்கு மல்லாகம் புதுமை மாதா ஆலயத்தில் ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியிலும், அதனைத் தொடர்ந்து அன்னாரது இல்லத்தில் நடைபெறும் மதிய போசன விருந்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
தேவாலய வீதி,
மல்லாகம்
Dear Pushpam akka, please accept our heartfelt sympathies at the loss of Linus athan. May our loving God be with you and all family members. Let us thank God for his life. Our prayers are with you...