
திதி:23/07/2025
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Mulhouse பரிஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆச்சிப்பிள்ளை குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
அழகான உங்கள் இன்முகம் காணாது
365 நாட்கள் சென்றதம்மா
ஆனாலும் உங்களுடன் இருப்பது போன்ற உணர்வு
நித்தமும் வருகின்றதே அம்மா
அது பொய் என உணர்கையில் துக்கம்
தொண்டையை நோகச் செய்கின்றதே அம்மா
உங்கள் 90 அகவை தினத்தை நாம்
உற்றார் உறவினர் நண்பர்களோடு
சுவிசில் கொண்டாட இருந்தோமே
நீங்களும் ஆசைப்பட்டதாலோ என்னவோ
அன்று மயங்கிய நிலையில் உங்கள் உயிரையும்
மூச்சையும் இவ்வுலகில் வைத்திருந்தீர்கள்
உங்களுக்குத் தெரிந்தா அம்மா
நாம் கனத்த இதயங்களுடன் வைத்திய சாலையில்
Cake வெட்டியது?
அம்மா நாம் போகின்ற திசையெல்லாம்
எமை ஆசிர்வதித்து காத்தருளுங்கள்
அம்மா விண்ணில் அமைதி பெற்று
மீண்டும் பிறப்புண்டேல் எம் குடும்பத்தில் பிறந்து
தளிர்நடை போட்டு எமை மகிழ்விப்பீர்களா?
உங்கள் இனிமையான நினைவுகளுடனும்
இறுதி நாட்களில் எமை வலிக்கச் செய்த
சோகமான நினைவுகளுடனும் நாம் என்றும்
இருப்போம் எம் இறுதி மூச்சுவரை..!
குடும்பத்தினருடன் பிள்ளைகள்..!