எங்கள் ஆச்சியம்மா மாமி - வருந்துகிறோம் தாயாய், பலருக்குத் தாயுமானவராய், அன்பைக் கொடுப்பதிலும், அன்புடன் அரவணைப்பதிலும், மற்றவர்க்கு ஆறுதலாய் இருப்பதிலும், அறுசுவை உண்டி சமைப்பதிலும், அதை அள்ளிக் கொடுப்பதிலும், நண்பியாய் பல கதைகள் சொல்லி சிரிப்பதிலும், கதையின் நடு நடுவே பல பகிடிகளைத் தெறிக்க விட்டு புன்னகையுடன் கலந்து அள்ளித் தருவதிலும், எந்நாளும் உற்றார் உறவினரிடம் சென்று குசலம் விசாரிப்பதிலும், எல்லோருக்கும் ஓடி, ஓடி உதவி செய்வதிலும், மாமிக்கு நிகர் மாமியே - இவர் கோபம் கொண்டு கண்டதில்லை, உரத்துக் பேசி அறிந்ததில்லை - இவரை "என்ரை சரஸ்வதி” என்று அப்பு சொல்லுவார். அயலிலிருந்து, எங்கள் இன்ப துன்பங்களில் கலந்து எம்முடன் வாழ்ந்த நாட்களை மறக்க முடியாத, சந்தோஷமான நினைவுகளாய் எம் மனதில் என்றும் சுமந்திருப்போம். நீண்ட காலம் நிறைவான வாழ்க்கை வாழ்ந்த உங்கள் ஆத்மா சாந்தியடையும்.
Her soul will be at God's place. Rest in peace.