1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சரஸ்வதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!
நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய் அம்மா!
எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
we are sorry for your loss.