Late Singarayar Felix Manothas
1952 -
2021
Trincomalee, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அவலம் நிறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்து நிற்கின்றோம் அண்ணா!!
பொறுமை,அன்பு,பாசம் எனும் பற்பல நற்பண்புகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு நீங்கள்!! எப்படியும் வாழலாம் என்ற இந்த உலகத்தில் இப்படித் தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டினீர்கள்!!
உங்களிடம் கடுஞ்சொல் கேட்டு அறியேன், பார்வையில் கருணை, பேச்சில் மென்மை, இதயம் நிறைந்த அன்பு, சீரிய சிந்தனை, விட்டுக் கொடுத்து,தட்டிக் கொடுத்து ஓர் புன்னகை மூலம், பல உறவுகளை இணைத்து வாழ்ந்தீர்களே அண்ணா!! பெரியவர்,சிறியவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் உதவிக் கரம் நீட்டி மதிப்பளித்தீர்களே அண்ணா!!
ஏன்? இந்த அவசரம்??இனி யாராலும் உங்கள் இடத்தை நிரப்ப முடியாது!! தாங்கள் இறைவன் திருப்பாதத்தில் நித்தியமாய் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்!!?
அண்ணாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் !!
Write Tribute