யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை எண்டேரமுல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட யோக்கீம்பிள்ளை பெனான்டோ அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்றூ காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பெனான்டோ(செக்கர்), வரோணிக்கா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற மேரிதிரேஷா யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
செல்ரன்(சுவிஸ்), ஷாமினி(பிரான்ஸ்), சுவேந்தினி(கனடா), கமறினி(இலங்கை), நளாயினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் வத்தளை எண்டேரமுல்லை புனித செபஸ்ரியார் Church மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.