

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியினைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரப்பங்குளம் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா குமாரரத்தினம் அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், வேலணை வடக்கு மணியக்காரர் வீட்டடியினைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், மண்டைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்லம்மா(சின்னம்மா) மற்றும் மனோன்மணி, நாகேஸ்வரி, அருமைநாயகம்(ஓய்வுபெற்ற அதிபர்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் குமாரவேல், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் ரேவதி, மச்சேந்திரராசா, காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்லத்தம்பி, ஆச்சிக்குட்டி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
our heart felt condolence sivarajah and family Canada