யாழ். மாவனெல்லயைப் பிறப்பிடமாகவும், இணுவில், மல்லாகம், மாவனெல்ல ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி வேலுச்சாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!!
ஆலமரம் என நீ இருந்தாய்
விழுதுகள் விருட்சமாகும் வரை
தலைமுறை தலைநிமிர்ந்ததும்
தலைசாய்ந்தாயோ அம்மா!
உனக்கான வாழ்க்கை 17 வயது வரையே
இறுதி மூச்சு வரை எங்களுக்காகவே
வாழ்ந்தாயே அம்மா!
உனக்கான இடம் வெற்றிடமாக போனதே
நினைவுகள் மட்டுமே நிறந்தரமானதே அம்மா
குறுக்கெழுத்து போட்டி நிரப்புவதில்
உனக்கு இருக்கும் திறன் நாவல்கள்
புத்தகங்கள் வாசிப்பதில் உன் ஆர்வம்
சமையலில் உன் கை பக்குவம்
உன் வாசல் தேடி வருபவர்களின்
பசியாற்றும் உன் கருணை
இனி எங்கு காண்பேன் அம்மா..
தள்ளாத வயதிலும் நீ இருக்குறாய் என்பதே
யானை பலம் தந்ததம்மா
நீ இல்லாதபோது நான்
கோழையாகி போகிறேன் அம்மா..
அம்மா என்ற குரல் கேட்டும் போதெல்லாம்
சட்டென உன் முகம் தேடும்
விழிகளுக்கு தெரியவில்லை அம்மா
உனை இனி காணவே முடியாதென்பது
தொலைபேசியின் மணி ஒலிக்கும் போது
உன் குரலுக்காய் ஏங்கும் செவிக்கு
தெரியவில்லையம்மா உன் குரலை
இனி கேட்கவே முடியாதென்பது
அறிந்தும் அறியாமலும் சில மௌனங்கள்
சொல்வதற்கும் கேட்பதற்கும்
ஆயிரம் விடயங்கள் நள்ளிரவு விழிப்புகளில்!
அலை அலையாய் உன் ஞாபங்கள்
கண்ணீர் கரை தேடுகின்றது அம்மா..
கனவிலாவது வந்து செல் அம்மா
காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
மகள்