Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 SEP 1964
இறப்பு 04 NOV 2023
அமரர் யோகேஸ்வரன் சிவப்பிரகாசம்
வயது 59
அமரர் யோகேஸ்வரன் சிவப்பிரகாசம் 1964 - 2023 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 23-10-2024

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சிவப்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்

பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எம் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.

மறுபிறவி என்று ஒன்று உண்டென்றால்
மறுபடியும் எமக்கே தந்தையாய்
நீங்கள் பிறக்க வேண்டும் அப்பா!

எங்கள் உயிர் உள்ளவரை உங்கள்
நினைவுகளோடு என்றும் வாழும் 

என்றும் வருத்தத்துடன் நினைவு கூரும்
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர் 

தகவல்: குடும்பத்தினர்