10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் யோகேஸ்வரி வேலாயுதம்
வயது 61
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தன், கொலண்ட், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்மூடித்திறக்கும் முன் எம்மை விட்டுப் பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் பிரிவுதன்னை எம்மனங்கள்
ஏற்க மறக்குதம்மா
பார்க்கும் இடங்களெல்லாம் உங்கள் புன்னகை
பூத்திருக்குதம்மா நீங்கள் எம்மோடு இருந்து
வாழ்ந்த காலங்களை நினைக்கையில்
எம் இதயங்கள் துடிக்க மறுக்குதம்மா
நீங்கள் எமை விட்டுப் பிரிந்தாலும்- தாயே
நித்தலும் உங்கள் நினைவு நெஞ்சில் நிழலாடுதம்மா
எம் சொப்பணத்தில் நீங்கள் சோதி வடிவாகி வந்து
அற்புதங்கள் பல புரிகின்றாயம்மா
பத்தாண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் வருடங்கள்
ஓடினால் என்ன, என்றும் உங்கள் பிரிவால்
நாம் துடிக்கின்றோம் அம்மா..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்