Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JAN 1947
இறப்பு 26 MAR 2019
அமரர் யோகரட்ணம் இராஜேஸ்வரி
வயது 72
அமரர் யோகரட்ணம் இராஜேஸ்வரி 1947 - 2019 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானை நாகலிங்கம்சுவாமி வீதியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சதாசிவம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறீபவன்(லண்டன்), வனிதா(லண்டன்), பிரகாஷ்(கனடா), சசிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, தங்கபூபதி, தவமணிதேவி மற்றும் ஞானம்மா, சிங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோமதி, சத்தியபவன், குணாளினி, துஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்மிதா, ஆகாஷ், அஸ்வின், அர்ஜீன், அபிஷா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices