Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 07 JUN 1936
மறைவு 15 DEC 2023
அமரர் யோகரட்ணம் கனகசபாபதி
வயது 87
அமரர் யோகரட்ணம் கனகசபாபதி 1936 - 2023 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் கனகசபாபதி அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை(ஸ்தாபகர், மாப்பியன் மில்), தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(இளைப்பாறிய புகையிரத தலைமைப் பாதுகாவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(ஓய்வுபெற்ற உப அதிபர், யா/ ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயம்), ரஞ்சிற்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிறீகரன்(ஓய்வுபெற்ற உப அதிபர், யா/பரியோவான் கல்லூரி), பூம்பா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்மரட்ணம்(லண்டன்), காலஞ்சென்ற ஞானரட்ணம், அமிர்தரட்ணம்(கனடா), பஞ்சரட்ணம்(மானிப்பாய்- மில்), சுகிர்தரட்ணம்(கொழும்பு), காலஞ்சென்ற விஜயரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரகுராஜ்(ஆராய்ச்சி உத்தியோகத்தர், TRI. தலவாக்கலை), ரூபினி(சுற்றாடல் உத்தியோகத்தர், CEA), பிருதிவி(பொறியியலாளர். NWS&DB), டிலக்‌ஷனா(ஐக்கிய அமெரிக்கா), அர்ச்சுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யுஹாசினி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று  மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-
குடும்பத்தினர்: +94742241481

வீட்டு முகவரி:
"விஜயாபதி"
கல்லூரி ஒழுங்கை,
மானிப்பாய்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices