
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, லண்டன் South Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் யோகராணி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
ஆண்டு ஒன்று கடந்தது
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
Rest In Peace