Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 MAY 1956
இறப்பு 17 AUG 2026
திருமதி யோகராணி திருஞானபாலன் (யோகம்)
வயது 70
திருமதி யோகராணி திருஞானபாலன் 1956 - 2026 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி திருஞானபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா! நீங்கள் எம்மை விட்டுப்பிரிந்து
நாட்கள் 31 உருண்டோடி விட்டன
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை,
உங்களைப்போல் அரவணைக்க யாருமில்லையே!

நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாம்,
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாய் நிற்க்கின்றோம்;
உங்கள் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அறிவுரைகள் இல்லாமால்
தளர்ந்து போகின்றோம் அம்மா

ஆண்டவன் அழைப்புக்கு யாம் என்செய்வோம் அம்மா?
வாழும் காலத்தில் உங்களைப்போல்
இரக்கம், கருணை, பாசம், அன்பு, ஈகை, விரும்தோம்பல்
தெய்வபக்தியோடு நீங்கள் காட்டிய முன்மாதிரியைப்
பின்பற்றி நடப்போம் அம்மா

நீங்கள் மறைந்து விட்டாலும், உங்கள் நினைவுகள்
 எங்கள் இதயத்திலிருந்து ஒருபோதும் அழியாது

உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன் திருவடி நிழலில்
சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 18 Aug, 2026