யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோகராஜா துரையப்பா அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜோகராஜா புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சூரியகலா, காலஞ்சென்ற சுரேஸ்குமார், வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டயானா அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா, காலஞ்சென்ற அன்னலக்சுமி, ஜெகஜோதி(கனடா), பத்மாவதி, காலஞ்சென்ற தவராசா, அரசரட்ணம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதபிள்ளை, கைலைநாதன் மற்றும் குணரட்ணம், காலஞ்சென்ற சரஸ்வதி, ஆறுமுகவடிவேல்(ஜேர்மனி), ஜோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நக்சன், லக்சன், மத்தியு, ராயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.