Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 FEB 1955
இறப்பு 05 MAY 2023
அமரர் யோகராஜா தர்மலிங்கம் 1955 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி : 23-04-2024

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகராஜா தர்மலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உறைவிடமாய்
திகழ்ந்து எம்மை வழிநடத்தி
பாதுகாத்து வளர்த்து எம்
நல்வாழ்விற்காய் தன்னை அர்ப்பணித்த
எம் அன்புத் தெய்வமே!

ஆண்டு ஒன்று ஆனதுவே
ஆறவில்லை எம் துயரம்
வையகம் தன்னில் வாழ்வாங்கு
வாழ்ந்து வழிகாட்டிய தெய்வமே
உங்கள் அன்பு நினைவுகள்
எங்கள் நெஞ்சிலிருந்து
என்றென்றும் மாறாது மறையாது

இனிய பொழுதில்
காலனவன் செய்த செயலால்
எம்மையெல்லாம்
கலங்க வைத்துப் போனதேன்?
கடமையெல்லாம் முடிந்ததென்றா
காலன் உங்களை கவர்ந்தெடுத்து
எம்மை கண்ணீரில் மூழ்கவிட்டான்?

அன்பையும் பண்பையும்
பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
பாசத்தை ஊட்டி பாதி வழியில்
கைவிட்டு மீளாத்துயில் கொண்டு
மண்ணுலகை விட்டு மறைந்தாலும்
உங்கள் மாண்புறு பெருமைகள்
எங்கள் மனங்களில்
என்றும் வாழும்!

கண்கண்ட தெய்வமே
கனவினிலே காணத் துடிக்கின்றோம்
காத்திருப்போம் பல ஜென்மம்
எங்கள் மனங்களில் என்றும் வாழும்
எங்கள் ஆறுயிர்த் தெய்வமே
உங்கள் ஆத்மா சாந்திக்காக
இந் நாளில் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!    


தகவல்: குடும்பத்தினர்

Photos