மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நாரந்தனை, ஜேர்மனி Grevenbroich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகநாயகம் பேரின்பநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மாதம் ஒன்று ஆகியும்,
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 31 நாட்கள் ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கண்ணீர் அஞ்சலி பேரின்பநாயகம் யோகநாயகம் கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. சங்கீதம் 116:15 அன்பும் கருணையும் நிறைந்தவர் அமைதியின் பாதையில் நடந்தவர் உலகின் மனிதத்தை...