யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New York - Rochester, NY, கைதடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகம்மா முத்துகுமாரசுவாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள்! எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
உழைத்துக் களைத்து உங்கள் கடமைகளை
எல்லாம் சரிவரச் செய்துவிட்டு நிம்மதியாகக்
கடைசி காலத்தில் கனவுலகில் வாழ
வேண்டுமென்று இருந்த வேளையில் காலன் அவன்
உங்கள் கனவுகளைக் கலைத்து விட்டானே தாயே...
கணவன் கலங்கி நிற்க பிள்ளையவன்
தவித்திருக்க உற்றார் உறவினர்
கண்ணீரில் மிதந்திருக்கச் சடாரெனப்
பிரிந்து சென்றாயே தாயே...
எங்கள் நித்திலமே யோகம்மா!
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!
எம் நெஞ்சக்குடுவைக்குள்
உன் அன்பை நிரப்பிவிட்டு
நீ நீண்ட துயில் கொண்டதேனோ?
சுந்தரத் தமிழாலே கதைபேசும்
சித்திரமே உன் குரல் கேளாத வீடு
நித்தமும் நிசப்தமாய்க் கிடக்குதம்மா!
அன்னாரின் பிரிவால் துயறுற்று இருந்த எம் குடும்பத்தினருக்கு, பல வழிகளிலும் ஆறுதல் அளித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest sympathies to you all. May her Soul rest in peace.