1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகம்மா சந்திரசேகரம்
வயது 81
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த யோகம்மா சந்திரசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறைவா என்னைக் காத்தருளும்
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்” (திபா.16:1)
பூவுலகு விடைகொடுக்க
பொன்னுலகை அடைந்து
புகழ் மேலுலகில் மேன்மை பெற்று
மேலான பதமடைந்தீர்!
நீங்காத நினைவுகளால்
நீர் மல்கும் விழிகளுடன்
தாங்காத மக்கள்
உற்றார் உலகோர்
ஏங்காத நாளில்லை
ஏன் பறந்தீர் எம்மைவிட்டு?
ஆண்டுகள் எத்தனை போனாலும்
எம்மோடு நீர் பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உங்கள் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது...
தகவல்:
மனோகரன் குடும்பத்தினர்