திதி: 20/12/2025
யாழ். கரம்பன் கிழக்கு பாலக்காடு சந்தியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகம்மா சோமசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் தாயே.....
இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது....
இடிந்து எரியுது இதயம்.....!!!
அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
அம்மா! என்று நாங்கள் யாரை அழைப்போம்?
காலத்தால் எம்மைப் பிரிந்து
கண்களில் நீர் மல்க வைத்து
நாம் இங்கே தவித்து நிற்க
எம்மை விட்டுப் போனதெங்கே?
ஆண்டு பத்து சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
ஆண்டுகள் பத்து ஆனதம்மா
ஆறவில்லை எம் மனது
பாரதனில் எமை ஈன்ற
பண்பு மிக்க அம்மாவே...!!!
கோடி பொருள் தானிருந்தும் அம்மா
உந்தன் கொள்ளை அன்புக்கேங்குகின்றோம்
எங்கே நாம் சென்றாலும்
எம் வாழ்வின் வழித்துனையாய்
எமைத் தொடரும் உங்கள் நினைவு..!
வாழ்வு எனும் பாதையினை
வழிகாட்டி தந்தாய் அம்மா
ஈர விழிகளுடன் எமை ஈன்ற
தாயினை நாம் தேடுகிறோம்...!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
என்றென்றும் இறைவனை
பிரார்த்தனை செய்கின்றோம்.