12ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் யோகாம்பிகை சுப்பிரமணியம்
                    
                            
                மறைவு
                - 23 MAR 2013
            
                                    
            
                    Tribute
                    2
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        முகாவில் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகாம்பிகை சுப்பிரமணியம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் 12 சென்றாலும்
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
நீராக நின்றெரியுதம்மா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
அம்மா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு ஆறவில்லை
நெஞ்சம் அன்பின் ஈரம் காய்வதற்கு - என்றும்
 எம் அருகில் இருக்கின்றாய் - அதனால்
ஏங்கவில்லை நாம் இனிக் காண்போமா
என்று கல்லறை வாழ்வில் நெடுங்காலம்
 சென்றாலும் எங்கள் நெஞ்சறைக் கூட்டில்
அழியாத ஓவியம் அம்மா நீங்கள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
                        தகவல்:
                        குடும்பத்தினர்