யசோக்கா உங்கள் முகத்தோடு எப்போதும் ஒட்டியிருக்கும் அந்த புன்னகை, அந்த உரத்த சிரிப்பு, எல்லோரையும் கட்டிப்போடும் கலகல பேச்சு, கவிதையாய் நீங்கள் எங்களை அழைக்கும் குரல் எல்லாம் அடங்கிவிட்டது. நான் பார்த்து வியந்த ஆளுமை நீங்கள், துணிந்து முடிவுகள் எடுத்து அதை செய்து முடித்து, வாழ்வில் பலவற்றை சாதித்து ஓய்வெடுத்துகொண்டிருந்த உங்களுக்கு நிரந்தர ஓய்வு வழங்கப்பட்டுவிட்டது. கலியாணம் செய்து வைப்பதில் இருந்து கவிதை எழுதி வாசிப்பதுவரை கூட்டத்தில் தனித்துத்தெரியும் எங்கள் விழாக்களின் சிறப்பு நீங்கள். வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் ரசித்து வாழ்ந்து, பூவுக்கும் குருவிக்கும் கவிதை எழுதி , உறவுகளை கொண்டாடி வாழ்ந்த எங்கள் யசோக்கா எங்களை விட்டு சென்றுவிட்டார் என்ற உண்மையை ஏற்க மறுக்கிறது மனது.
My condolences to all family members. May she rest in peace