Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 MAR 1962
மறைவு 23 DEC 2022
அமரர் விஜிதி கருணானந்தன்
பழைய மாணவி - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, பிரதி அதிபர் - கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்
வயது 60
அமரர் விஜிதி கருணானந்தன் 1962 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட விஜிதி கருணானந்தன் அவர்கள் 23-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பேராறு குமாரசாமி(JP), காலஞ்சென்ற மணிமேகலை தம்பதிகளின் பாசமிகு மூத்தப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தன்(ஓய்வுபெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜானன்(IIT), மதுமிதா(KDU), கஹானா(SLIIT) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன், யாழ். மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியை), விஜியா(தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம்), டாக்டர் வாசுகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஷிகா, ரஷ்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியும்,

ஹரிசன், தக்‌ஷின்யா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ராஜி, ஜெயகுமார், மதிவண்ணன், நிரஞ்சன், மீனாலோஜினி, ஜெகதீஸ்வரி, ரஞ்சினி, காலஞ்சென்ற சுலோஜனா, சந்திரவதனா, காலஞ்சென்ற சச்சிதானந்தம், வசந்தலீலா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 26-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Time: Dec 26, 2022 07:00 AM Colombo
நேரடி ஒளிபரப்பு: Click Here

Meeting ID: 814 6733 4302
Password : 123


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கருணானந்தன் - கணவர்
கஜானன் - மகன்
விமலன் - சகோதரன்
விஜிதா - சகோதரி
விஜியா - சகோதரி
வசந்தா - மைத்துனி
வதனி - மைத்துனி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Jan, 2023