1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வியாகரத்தினம் லிங்கரத்தினம்
வயது 68

அமரர் வியாகரத்தினம் லிங்கரத்தினம்
1956 -
2024
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 18-04-2025
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வியாகரத்தினம் லிங்கரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையாத தீயினில்
அலையான சுவாலையாய்
ஒரு வருடங்களாகியும் அனல்
கக்கி எரியுதையா எங்கள்
அப்பாவே உங்கள் நினைவுகள்
அன்பின் அடையாளமே
அரவணைப்பின் உதாரணமே
பண்பின் திருவுருவே
பாசத்தின் இலக்கணமே
நேசத்தின் பிறப்பிடமே
நிறைந்திட்ட குல விளக்கே
இப்போது எங்களோடு
நீர் இல்லையே!
போகும் இடமெல்லாம்
உன் நினைவே... !
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள்
எல்லாம் நித்தம் நினைவில் வந்து
வந்து எம்மை நெறிப்படுத்தி
செல்கின்றன நிதானமுடன்
அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்