எமைப் பிரிந்த இனிய பாசப்பிறப்பே
நாடுகள் தாண்டி வாழ்ந்தாலும்- உன்
ஞாபகங்கள் எம்மை நாடுகிறதே
தொப்புள் கொடி உறவாய்
புவி பரம்பரையில்
மூன்றாவதாய் உதித்த முத்தாய்
எம் நலன் நாடும் இனிய பாசப் பிணைப்பாய்
விளங்கினாயே அண்ணா
காலனவன் செய்த கொடுமைதான்
எம்மை விட்டு நீ பிரிந்து சென்று
31 நாட்கள் கடந்தனவே
காலம் பல கடந்தாலும்
உன் பிரிவின் காயத்தின் வடு என்றும் ஆறாதய்யா
நின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இங்ஙனம்,
அன்புச் சகோதரங்கள்
Dear Partheepan So sad to hear the heart breaking news. Our thoughts and prayers are with you and your family. May his soul rest in peace.