

யாழ். வேலணை சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வரத்தினம் லோகேஸ்வரன் அவர்கள் 30-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வரத்தினம் ஜெயலக்ஷமி(மணி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான லிங்கப்பிள்ளை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்வியா, நிதுசனா, திவாரகா, கெளசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேஸ்வரன்(வவா- பிரான்ஸ்), ஜெயகெளரி(இலங்கை), சிவகெளரி(பிரான்ஸ்), ஞானகெளரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மகேஸ்வரி, சண்முகலிங்கம், சொர்ணலிங்கம்(செல்வா), காலஞ்சென்ற கனகலிங்கம்(தயா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுபாசினி, உதயகுமாரன், உதயசங்கர், றஜனிகாந்த், தவமணிதேவி, தவராசா, தர்மராசா, தர்மகுலசிங்கம், தர்மரெத்தினம், தவராணி, செல்வராணி, சுரேஷ்குமார், ரதீஷ்குமார், வவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகராசா, பரமேஸ்வரி, ராணி, நந்தா, பவானி, சிவகுமார், கயிலாயம், பிரியா, ராகினி, சிவா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சித்தப்பா, அத்தை, மாமாக்களின் பிள்ளைகளின் உடன்பிறவாச் சகோதரரும், மைத்துனரும் மற்றும் இவர்களது பிள்ளைகளின் பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.