அமரர் விஸ்வலிங்கம் பத்மநாதன்
Old student of Urumparai Hindu College and Colombo St. Joseph's College, Retd. Executive Engineer High Ways Sri Lanka
வயது 88
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் புதுவதன்றே;
தொன்றியல் வாழ்க்கை (இளங்கோ அடிகள்).
இதனையே பூங்குன்றனார் என்ற சங்க காலப் புலவர் -
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே!
என்கிறார்.
சாதல் புதியதன்று. பிறப்பெடுத்த எல்லா உயிரும் இறுதியில் முடிவுக்கு வருகின்றன. இயற்கை கொடுக்கும் மிகப்பெரிய பரிசு அதுவே.
ஆறு கடலை நோக்கி ஓடுகிறது. வாழ்வு சாவை நோக்கி ஓடுகிறது.
பிறப்பதில் ஒரு மகிழ்ச்சி. வாழ்வதில் ஒரு இன்பம். அதனோடு நிறுத்திக் கொள்; வாழ்வே இன்பமெனக் கருதிவிடாதே. அப்படியே சாவைத் துன்பமானது என்றும் எண்ண வேண்டாம். ஆறு அதன் போக்கில் பாயட்டும். வாழ்வு அதன் இயல்பில் நகரட்டும்.
மறைந்த நண்பன் பத்மநாதன் அவர்களோடு கடந்த 65 ஆண்டுகளாக இணைபிரியாத நட்பு. இரத்தினபுரியில் தொடங்கிய நட்பு இலண்டன் வரை நீடித்தது.
அவ்வப்போது தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பார். பழைய நினைவுகளை மீட்டெடுப்பார். பழைய நண்பர்களில் தானும் அடியேனுமே மிஞ்சியிருப்பதாகச் சொல்வார். இப்போது நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன்.
எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். இனிமையாகச் பேசுவார். உதவி என்றால் ஓடோடி வருவார். அவரையும் அவரது மாமன், மைத்துனர்கள் எல்லோரையும் நான் அறிவேன். கனடா வரும் போது அவரது மகன் ஸ்ரீகமலனையும் எனது இல்லத்துக்குக் கூட்டி வருவார். மகளைப்பற்றியும் பேசுவார்.
அவரைப் போன்ற மனிதப் பிறவிகள் மிக அரிதாகவே பிறக்கின்றன. நிறை வாழ்வு வாழ்ந்து தனது இவ்வுலக பயணத்தை முடித்துக் கொண்டார். காலம் வந்தால் உயிர் கூட்டைவிட்டுப் பறக்கும் பறவை போல் பறந்துவிடுகிறது. இதுதான் உலக நியதி. யாரும் தப்ப முடியாது.
அவரைப் பிரிந்து வாடும் அவரது பிள்ளைகள், உறவினர்களுக்கு எனது குடும்ப சார்பில் ஆறுதல் கூறுகிறேன்.
நக்கீரன் தங்கவேலு
கனடா
Write Tribute
Our deepest condolences to the family.