Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1937
இறப்பு 07 JUN 2024
அமரர் விஸ்வலிங்கம் சிவபாக்கியம்
வயது 86
அமரர் விஸ்வலிங்கம் சிவபாக்கியம் 1937 - 2024 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டி மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் சிவபாக்கியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-05-2025

ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம் மறையாது
 உங்கள் நினைவு!

எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
 புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
 எம் மனம் கலங்குகிறது...

 கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அம்மா!
 இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது 
அம்மா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
 என ஏங்கித் தவிக்கிறோம் 
அம்மா...
 ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்

உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!

தகவல்: குடும்பத்தினர்