மரண அறிவித்தல்
தோற்றம் 26 NOV 1932
மறைவு 14 MAY 2022
திருமதி விசுவலிங்கம் பரிமளம்
வயது 89
திருமதி விசுவலிங்கம் பரிமளம் 1932 - 2022 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 7, டிலாசால் வீதி, கொழும்பு- 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பரிமளம் அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைச் சேர்ந்த இராமநாதி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகமுத்து அன்னப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம்(S.S.Wilson & Co - முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அமிர்தரிஸ், தேவமனோகரன்(சுவிஸ்), தவமணிதேவி(கொழும்பு), சுரேந்திரன்(கொலண்ட்), குகதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா(கொழும்பு), சுந்தரலிங்கம்(புங்குடுதீவு), செல்வராணி(சுவிஸ்), தனலட்சுமி(கனடா), நடேசமூர்த்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகாலெட்சுமி, காலஞ்சென்ற இராமச்சந்திரன், புனிதவதி, திருநாவுக்கரசு, கோபாலபிள்ளை, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரூபசுதா(சுவிஸ்), காலஞ்சென்ற தங்கேஸ்வரன், வசந்தி(கொலண்ட்), சுதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆஷா(சுவிஸ்), வினோஷா(சுவிஸ்), சகானா, ரக்‌ஷனா, ரஜீபன்(லண்டன்), சஞ்சுதன்(கனடா), தர்சனா(சுவிஸ்), பிரதீபன்(கொழும்பு) ஆகியோரின் பேத்தியும்,

ஆதீஸ்(சுவிஸ்), ஜித்தேஸ்(சுவிஸ்), லெத்தீசியா, தஹீரா(சுவிஸ்), ஷாரவ், றயா(லண்டன்), ரித்விக்(கொழும்பு), ஷாமி(கொலண்ட்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு,  16-05-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இலக்கம் 7,
டிலாசால் வீதி,
கொழும்பு- 15.

தகவல்: பிள்ளைகள், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்